அட்லீ – ஷாருக்கான் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘பதான்’ படத்தினை நிறைவுசெய்த பின் அட்லீ படத்தில் நடிக்க ஷாருக்கான் தேதி ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது, இப்படத்திற்கான முதற்கட்டப் பணிகளை மும்பையில் முகாமிட்டுள்ள அட்லீ ஆரம்பித்துவிட்டதாகவும் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே மும்பையில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளதால் விரைவில் ஹிந்தி படங்களின் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அட்லீ – ஷாருக்கான் இணையும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஏற்கனவே அட்லீயுடன் மெர்சல், பிகில் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.