டெல்லி: சிபிஎஸ்சி, 12 ஆம் வகுப்பு முடிவை செயல்திறனின் அடிப்படையில் தீர்மானிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இது தொடர்பான வழக்கின் விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா 2வது அலையின் தீவிர தாக்கம் காரணமாக, சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு ரத்து செய்யப்படுதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. உயர்கல்விக்கு செல்வதற்கு 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் மிகவும் முக்கியம் என்பதால், அவர்களின் மதிப்பெண்கள் எவ்வாறு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த விசாரணையின்போது, எதன் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இந்த நிலையில், வழக்கின் இன்றைய விசாரணையின்போது, சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு மதிப்பெண் செயல்திறனின் அடிப்படையில் தீர்மானிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது
அதன்படி,
10ம் வகுப்பில் இருந்து 10 -30% வெயிட்டேஜ்
11ம் வகுப்பில் இருந்து 11 -30% வெயிட்டேஜ்
12ம் வகுப்பில் இருந்து 12 -40% வெயிட்டேஜ் மதிப்பெண்கள் சேர்த்து கணக்கிடப்பட உள்ளது.
அதாவது, 12 ஆம் வகுப்பைப் பொறுத்தவரை, அலகு, கால மற்றும் நடைமுறைகளில் பெறப்பட்ட மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும், மேலும் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு (30 சதவிகித வெயிட்டேஜ்) மற்றும் 12 ஆம் வகுப்பு (40 சதவிகித வெயிட்டேஜ்) ஆகியவற்றின் செயல்திறன் குறித்து முடிவுகள் முடிவு செய்யப்படும். இதற்கிடையில், 10 மற்றும் 11 வகுப்புகளுக்கு, காலத் தேர்வுகளில் ஐந்து தாள்களில் மூன்றில் சிறந்த மதிப்பெண்கள் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.