டெல்லி: அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசி, இந்தியாவில் சீரம் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி 90% செயல்திறன் உள்ளது என்பது சோதனயில் நிரூபணமாகி உள்ளதாகவும், மருத்துவ பரிசோதனைகள் நிறைவடையும் நிலையில் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தாலும், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால்,மேலும் பல நிறுவனங்களின் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

அதன்படி,   அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசி, இந்தியாவில்  புனேவில் உளள  சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியாவுடன் (எஸ்ஐஐ) ஒப்பந்தம் பெற்றுள்ளது.  இது இந்தியாவை உள்ளடக்கிய குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு குறைந்தது ஒரு பில்லியன் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்த தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனை நடைபெற்று வருகிறது. இதுவரை நட்த்தப்பட்ட சோதனைகளில் 90 சதவிகிதம்  செயல்திறன் உள்ளது என நிரூபிக்கப்பட்டு உள்ளது.

இதை பாராட்டிய மத்திய அரசு, நோவாவாக்ஸ் செயல்திறன் தரவுகள் நம்பிக்கை மற்றும் ஊக்கமளிக்கிறது, ந்த தடுப்பூசி மிகவும் பாதுகாப்பான தாகவும், மிகவும் பயனுள்ளதாக வும் இருக்கிறது . என்று கூறியிருப்பதுடன், இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் இந்தியாவில் நிறைவடையும் நிலையில் உள்ளது  விரைவில்,  குழந்தைகள் மீதான நோவாவாக்ஸ் தடுப்பூசி சோதனைகளையும் தொடங்கு  என்று நான் நம்புகிறேன் ” என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.

‘இதுதொடர்பாக சீரம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், . “”நோவாவாக்ஸ் தடுப்பூசி ‘என்விஎக்ஸ்-கோவி 2373’ மிதமான மற்றும் கடுமையான நோய்களுக்கு எதிராக 100 சதவிகித பாதுகாப்பை நிரூபித்தது, ஒட்டுமொத்தமாக 90% செயல்திறன் கொண்டது” என  தெரிவித்துள்ளது.