டெல்லி: தகவல் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுமுன், வரும் 18-ம்தேதி டிவிட்டர் நிறுவனம் ஆஜராகவேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் மூலம் நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக தகவல் தொழில்நுட்ப விதிகளை கொண்டு வந்தது. அந்த விதிகளை பின்பற்ற வேண்டும் என பேஸ்புக், oவிட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களுக்கு மே 25 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், சில நிறுவனங்கள் இந்திய அரசின் விதிகளை ஏற்க டிவிட்டர் நிறுவனம் மறுத்து வருகிறது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட்டும், இந்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், இந்திய அரசின் புதிய விதிகளை டிவிட்டர் நிறுவனம் ஏற்க வேண்டும் என்றும், இல்லையேல் சட்டரீதியிலான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என டிவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.
அதைத்தொடர்ந்து பணிந்து வந்த டிவிட்டர் நிறுவனம், கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் விதிகளை ஏற்க கூடுதல் கால அவகாசம் தரும்படி கோரிக்கை வைத்துள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழு முன் வரும் 18 ஆம் தேதி ஆஜராக டிவிட்டர் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது .