அறிவோம் தாவரங்களை – பொடுதலை செடி

பொடுதலை செடி (Phyla nodiflora)

நீர் நிறைந்த பகுதிகளில் வளர்ந்து கிடக்கும் தரை படர் பூண்டு செடி நீ!

தலைப் பொடுகைக் குணமாக்குவதால் நீ பொடுதலை ஆனாய்!

பூஞ்சாதம் உன் இன்னொருபெயர்!

துவர்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்ட மருந்து செடி நீ!

முடி உதிர்தல், வெள்ளை படுதல், கோழைச்சளி, உள் உறுப்புப்புண்கள், வீக்கம், சிறுநீர்ப் பெருக்கம், சீதக்கழிச்சல், இருமல், மூலநோய், சிறுநீர் எரிச்சல், சுவாசக் கோளாறு, கழிச்சல், வயிற்று வலி, அடிபட்ட புண்கள், கட்டிகள் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படும்  மூலிகைச் செடியே!

இலை, காய் என எல்லாம் பயன்படும் நல்ல செடியே!

கரண்டி வடிவ இலைகளைக் கொண்ட கண்மணி செடியே!

தரையோடு படர்ந்திருக்கும் தாருகாவனச் செடியே!

ஆண்டு முழுவதும் பூ,காய் கொடுக்கும் அற்புதச் செடியே!

கருஞ்சிவப்புடன் கூடிய வெள்ளைப் பூச்செடியே!

திப்பிலி போன்ற வடிவம் கொண்ட காய்ச் செடியே!

பதற்றத்தைச் சாந்தப்படுத்தும் தியான செடியே!

கொசு, புழுக்களை அழிக்கும் காரணியே!

பூஞ்சை தொற்றுக்களை எதிர்க்கும் சக்தி கொடியே!

நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க!உயர்க!

நன்றி : பேரா.முனைவர்.

ச.தியாகராஜன்(VST)

நெய்வேலி.

📱9443405050