மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும் உலகின் மிகப்பெரும் பணக்காரருமான பில் கேட்ஸ் தனது மனைவி மெலின்டா கேட்ஸை விவாகரத்து செய்யப்போவதாக மே மாதம் 4 ஆம் தேதி அறிவித்தார்.
கேட்ஸின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அவர் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை தனது முன்னாள் காதலியை பார்க்கச் செல்வார் என்று ஏற்கனவே ஒரு செய்தி வெளியான நிலையில்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக பணியாற்றிய போது அங்கு பணிபுரிந்த ஒரு பெண்ணுடன் அவருக்கு நெருக்கமான தொடர்பு இருந்ததாக சர்ச்சை எழுந்தது.
ஒரு பிசினஸ் மீட்டிங்கிற்கு தனது அலுவலக சகாக்களுடன் சென்ற கேட்ஸ், தனது குழுவில் இருந்த வேறொருவரிடம் தான் அந்த பெண்ணுடன் இன்றிரவு விருந்துக்கு சொல்லப்போகிறேன், அவரை என்னோடு வரச்சொல்லுங்கள் என்று கூறியதாக அவருடன் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் தெரிவித்ததாக செய்தி வெளியானது.
அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்த காலத்தில், அலுவலகத்திற்கு வரும்போது மெர்சிடிஸ் காரில் வரும் பில் கேட்ஸ், திடீர் திடீரென தனக்கு வேறு வேலை இருப்பதாக கூறி போர்ஷ்செ காரில் ஏறிச்செல்வார் என்றும் தெரிவித்தார்.
பில் கேட்ஸின் நடவடிக்கைகளை தனியார் புலணாய்வு அமைப்பின் மூலம் அறிந்துகொண்ட மெலின்டா கேட்ஸ் இதன் காரணமாகவே அவரை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின.
இதற்கு மறுப்பு தெரிவித்த மெலின்டா கேட்ஸ், பில் கேட்சுக்கும் அந்த பெண்ணுக்குமான தொடர்பை புலணாய்வு அமைப்பை வைத்து தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை, நான் அப்படி எதுவும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.