
நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தினார் பார்த்திபன்.
சமீபத்தில் ஒத்த செருப்பு படம் இந்தி, மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக பார்த்திபன் அறிவித்தார்.
இந்நிலையில் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ ஹிந்திக்கு என்ன பெயர் வைக்கலாம்? அம்மொழி அறிந்தவர்களுக்கு மட்டும்…’ என்று நடிகர் பார்த்திபன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பல கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
[youtube-feed feed=1]‘ஒத்த செருப்பு-size 7’ ஹிந்திக்கு என்ன பெயர் வைக்கலாம்?
அம்மொழி அறிந்தவர்களுக்கு மட்டும்… pic.twitter.com/crY3i5K1pL— Radhakrishnan Parthiban (@rparthiepan) June 5, 2021