வாஷிங்டன்:
கொரோனாவால் 3 ஆண்டுகளில் 6.3 கோடி பேரை காசநோய் தாக்கும் என்று அமெரிக்க அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா உட்பட ஏழு நாடுகளில் காசநோய் ஒழிப்பு நடவடிக்கைக்காக ரூ.416 கோடி உதவி செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
காசநோய் என்பது நுரையீரலை பாதிக்ககூடிய பக்டீரியா கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோயாகும். இந்த நோயால் உலக முழுவதும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோய்க்கு எதிராக போராடி வரும் இந்தியா, வங்கதேசம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தென்னாப்பிரிக்கா, தஜிகிஸ்தான் மற்றும் உக்ரைன் ஆகிய 7 நாடுகளுக்கு ரூ.416 கோடி உதவி செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அரசாங்கங்களுடன் எடுக்கப்பட்டுள்ள இந்த கூட்டு முயற்சி, கொரோனா தொற்றால் போராடி வரும் நெருக்கடியில் தவிக்கும் நாடுகளுக்கு ஒரு அடித்தளமாக இருக்கும் என்று அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனம் (யுஎஸ்ஐஐடி) தெரிவித்துள்ளது.
இது குறித்து யுஎஸ்ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 2019ம் ஆண்டை விட 2020ம் ஆண்டில் 10 லட்சத்துக்கும் குறைவான மக்களே காசநோய் சிகிச்சைக்கு எடுத்துள்ளனர்.
குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், 10 கோடி மக்களை நோய்வாய்ப்படுத்துகிறது. 1.4 கோடி உயிர்களை பறிக்கிறது. கொரோனா வைரசின் நீண்டகால தாக்கத்தின் காரணமாக, காசநோய் மேலும் 6.3 கோடி மக்களை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025ம் ஆண்டில் கூடுதலாக 1.4 கோடி இறப்புகள் ஏற்படும்.
கொரோனா தொற்று ஏற்படும் காசநோயாகளில் காசநோய் மட்டுமே உள்ளவர்களை விட மூன்று மடங்கு பேர் அதிகமாக இறக்க வாய்ப்புள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.