வாஷிங்டன்: மக்களிடையே தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ள அமெரிக்க அரசு, மக்களும் முன்வந்து தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் வகையில் பல்வேறு வகையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. அதன்படி, தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களுக்கு பீர் இலவசம் என அதிபர் ஜோ பைடன் அதிரடியாக அறிவித்து உள்ளார்.
இந்த நிலையில், மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வகையில், தடுப்பூசி போட்டுக் கொண்டால் இலவச பீர் வழங்கப்படும் என பைடன் அறிவித்து உள்ளார். இதுமட்டுமின்றி, விளையாட்டு போட்டிகளை காண இலவச டிக்கெட், தடுப்பூசி போடும் நாளில் இலவச குழந்தைகள் பராமரிப்பு, ஊதியத்துடன் கூடிய விடுமுறை, இலவச சொகுசு கப்பல் பயணம் எனலவ பல சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க புதிய அதிபராக பதவி ஏற்ற ஜோ பைடன் 100 நாட்களுக்குள் 1 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவித்து, அதற்கான பணிகளை முன்னெடுத்து வந்தார். அங்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருந்தாலும் எதிர்பார்த்தஅளவுக்க மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டவிசல்லை என்று கூறப்படுகிறது. வரும் ஜூலை 4-ம் தேதி அமெரிக்க சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், அதற்குள் 70% பேருக்கு தடுப்பூசி செலுத்திவிட அதிபர் பைடன் திட்டமிட்டுள்ளார். ஆனால், 21 வயதிற்கு மேற்பட்டவர்களில் குறைந்தது 63%பேர் தான் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்வதை இளைஞர்களிடையே ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு இலவச அறிவிப்புகளை பைன் அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி, இலவச பீர், இலவச விளையாட்டு டிக்கெட், தடுப்பூசி போடும் நாளில் இலவச குழந்தைகள் பராமரிப்பு, ஊதியத்துடன் கூடிய விடுமுறை, இலவச சொகுசு கப்பல் பயணம் உள்ளிட்ட பல சலுகைகள் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இந்த இலவச அறிவிப்புகள் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
மேலும், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் நாடு முழுவதும் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நம்ம மாநிலத்தில் இதுபோன்ற ஒரு அறிவிப்பு வெளியிட்டால்… என்ன நடக்கும்…. மக்களே சிந்தித்து பாருங்கள்…