சென்னை: தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டுமா? வேண்டாம் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை பொதுமக்களிடம் கருத்து கேட்டுள்ளது. இதற்காக 14417 என்கிற உதவி எண்ணை வெளியிட்டு உள்ளது. மேலும், tnschoolsedu21@gmail.com என்கிற இமெயில் முகவரிக்கும் மாணவர்கள் பெற்றோர்கள் கல்வியாளர்கள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து கருத்துக்களை பதிவு செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.
மத்தியஅரசு சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளதால், மாநிலங்களும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் உடன் இரண்டு நாட்களுக்குள் ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும், பிளஸ் டூ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்களுடன் கருத்து கேட்ட பின் முடிவெடுக்கப்படும். அனைத்து தரப்பின் கருத்துக்களை கேட்டபின் பிளஸ் டூ தேர்வு குறித்து இரண்டு நாட்களில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை சார்பில், பொதுமக்களிடம் கருத்து கேட்கும் வகையில், 14417 என்கிற உதவி எண் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், tnschoolsedu21@gmail.com என்கிற இமெயில் முகவரிக்கும் மாணவர்கள் பெற்றோர்கள் கல்வியாளர்கள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து கருத்துக்களை பதிவு செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவதில் மாணவ ,மாணவிகளுக்கு இடையே இருவேறு கருத்துகள் நிலவுகிறது. சில மாணவர்கள் தேர்வு நடத்த வேண்டும் என்றும் சில மாணவர்கள் தேர்வு நடத்த வேண்டும் என்றும் தெரிவித்து வருவதாக கூறினார்.
மாணவர்களின் உடல்நலன், பாதுகாப்பு முக்கியம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் முக்கியம் என்பதால் கவனத்துடன் முடிவெடுக்க வேண்டிய சூழல் உள்ளது என தெரிவித்தார்.