சென்னை: தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி கையிருப்பு உள்ளது என அமைச்சர்  மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

கொரோனா 2வது அலையின் தாக்கம் தமிழகத்தின் சில மாவட்டங்களில் அதிகரித்தும், பல மாவட்டங்களில் குறைந்தும் காணப்படுகிறது. தொற்று பரவலை முழுமையாக தடுக்க பொதுஊரடங்கும் அமலில் உள்ளது. மேலும் நோய் பரவலை தடுக்கும் வகையில்  தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கேர் சென்டரை ஆய்வு செய்த தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  தமிழகத்தில் இருக்கிற மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அவர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் வகையில் ஊக்கத் தொகையை தந்து மிகப்பெரிய அளவிலான மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார் முதல்வர் ஸ்டாலின். நானும், சுகாதாரத்துறை செயலாளரும் போகிற இடங்களிலெல்லாம் மருத்துவர்களும், செவிலியர்களும் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமின்றி நோயாளிகளை  மேலும் ஊக்கப்படுத்தவும், நம்பிக்கையை ஏற்படுத்த தான் கோவையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு  முதல்வர் சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்தா என்று கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் கையிருப்பில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் இன்னும் 2 நாட்களுக்கு மட்டுமா போதுமானது., தமிழகத்தற்கு மத்தியஅரசு  25 லட்சம் தடுப்பூசி தர வேண்டிய  நிலையில் 13 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கிடைத்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.