சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் வீடுவீடாக கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது.  கொரோனாவால்  குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்படுவதால், அவலர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளும் தயாராக  உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கோரோனா 2வது அலையின் தாக்கத்தில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்புகள்  அதிகரித்துள்ள நிலையில், குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், விரைவில் கொரோனா 3வது அலையில் தாக்கும் என அச்சம் எழுந்துள்ளது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  சென்னையில் 15 மண்டலங்களில் உள்ள வீடுகளில் காய்ச்சல் கண்டறியும் குழு சோதனை நடத்தி வருகிறது. இதுவரை  நடத்திய பரிசோதனையில் 4.94 லட்சம் பேருக்கு அறிகுறிகள் காணப்பட்டது. அதில் 96,000 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதா  தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடசென்னையி;ன முக்கிய பகுதிகளான ராயபுரம், தண்டையார்பேட்டை, மணலி, திருவொற்றியூர் மற்றும் மாதவரம் பகுதிகளில் நடத்தப்பட்ட  சோதனையின்போது 1.97 லட்சம் பேருக்கு அறிகுறிகள் காணப்பட்டது. அதில் 31,219 பேருக்கே கொரோனா உறுதி செய்யப்பட்டது.  மத்திய சென்னையின் எண்ணிக்கையை விட சற்று குறைவுதான். அங்கு 1.8 லட்சம் பேருக்கு அறிகுறிகள் தென்பட்டதால் பரிசோதனை செய்ததில் 37,720 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. திருவிக நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் ஆகியவை அடங்கும்.

மேலும், வருகின்ற மாதங்களில் பரவும்  கொரோனா தொற்று குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதால், அதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து கொரோனா சிகிச்சை மையங்களிலும் குழந்தைகளுக்கு தேவையான படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டு வருகிறது.  இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைல்ட் ஹெல்த்தில் 160 கோவிட் படுக்கைகள் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. 100 படுக்கைகள் ஏற்கனவே ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளில் அதிக பட்சமாக 1%-த்தினருக்கு மட்டுமே மருத்துவமனை உதவி தேவைப்படும். இருப்பினும் நிறைய அவசர சிகிச்சை உதவிகளை தயார் நிலையில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா ஊரடங்கின் காரணமாக குழந்தைகள் நல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. 205 படுக்கைகளில் 65 மட்டுமே நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.