டெல்லி: ஒரு மனிதனினின் ஆணவத்தால், கொரோனாவால், 97%இந்தியர்கள் ஏழ்மையை சந்தித்துள்ளனர். ஒரு மனிதனும் அவனது ஆணவமும்; ஒரு வைரசும் அதன் உருமாற்றமும்…என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மோடி தலைமையிலான மத்தியஅரசை குற்றம் சாட்டி டிவிட் பதிவிட்டுள்ளார்.

அவரது டிவிட்டில்,  ஒரு மனிதனின் ஆவணம் காரணமாக, இன்று நாட்டில், கொரோனா தொற்று உருமாறிய நிலையில் பரவல் நீடித்து வருகிறது.  இதன் காரணமாக 97% இந்தியர்கள் ஏழ்மையை சந்தித்து உள்ளனர்.

கொரோனா 2வதுஅலையை கட்டுப்படுத்த தவறியதாலும், கொரோனா பொதுமுடக்கம் காரணமாகவும், பொருளாதாரத்தில் கடுமையாக தாக்கம் ஏற்பட்டு இருப்பதுடன், வேலையின்மை அதிகரித்துள்ளது என  மே 21 புள்ளி விவவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய பொருளாதார தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் வியாஸ்-ஐ நான் கேட்கிறேன்,  இந்தியாவின் பொருளாதாரத்தை முன்பு போல உருவாக்க முடியுமா?  விரைவாக மீட் க முடியுமா? என கேள்வி எழுப்பி உளளார்.