சென்னை: தமிழகத்தில் தளர்வுகளற்ற கொரோனா பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் கிடைக்கும் வகையில், இன்றுமுதல் தெருத்தெருவாக நடமாடும் வண்டிகளில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியவருகிறது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கடந்த மே 10-ம் தேதி முதல் சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர், மே 24-ம் தேதி முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஆனால், தொற்று குறையாத நிலையில், ஊரடங்கை ஜூன்7-ம் தேதி காலை 7 மணிவரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
இந்த காலக்கட்டத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், ஏற்கனவே நடமாடும் வண்டிகள் மூலம் கான்கனிகள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது மாதிரி, தற்போது மளிகை பொருட்களும் விற்பனை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தொலைபேசி மற்றும் ஆன்லைனில் ஆர்டர் பெற்று வீட்டுக்கே காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை சென்று மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, இன்றுமுதல் பொதுமக்களின் வீடு தேடி மளிகை பொருட்கள் கிடைக்கும். வாகனங்களில் தெருத்தெருவாக மளிகை பொருட்கள் விற்பைனக்கு வர உள்ளது.
மேலும, நியாயவிலைக் கடைகள் காலை 8 முதல் பகல் 12 மணிவரை இயங்கலாம் என்றும், வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள், நிதி வர்த்தக சேவைகள், செபி உள்ளிட்ட பங்கு வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களுடன் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 7,500க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு மளிகை பொருட்கள் விற்பனை செய்ய டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. டோக்கன் வாங்கிய கடைக்காரர்களின் மொபைல் எண்கள் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.