சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைக்காக ஜுன் மாதம் முதல்  அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது   தற்போது அமலில் உள்ள பொதுமுடக்கம் 31ந்தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், பல மாவட்டங்களில் தொற்று பரவல் குறையாததால், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஊரடங்கு, மேலும், ஒரு வாரத்திற்கு, அதாவது ஜூன் 7-ம் தேதி காலை 6 மணி வரை   நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிவுப்பு வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்,  அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்றும் குறப்பிட்டு உள்ளார்.

“பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில்,13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம்,வரும் ஜூன் மாதம் முதல் வழங்கிட,கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.