சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்னும் கொரோனா தொற்று பரவல் குறையாத நிலையில், தற்போதுள்ள தளர்வுகளற்ற பொதுமுடக்கம் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாகவும், அதன்படி ஜூன் 7ம் தேதி காலை 6 மணி வரை இதே கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நடமாடும் மளிகை விற்பனைக்கு அனுமதி, வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் மளிகை பொருட்களை விற்கலாம் . மளிகை பொருட்களை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை விற்பனை செய்யலராம்.
ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் மளிகை பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க அனுமதி
அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்து வரும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடரும்
ஜூன் மாதம் முதல் 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ரேஷன் கடைகளில் பெறலாம் . அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்
பொதுமக்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்
வீட்டை விட்டு வெளியில் வருவோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
மிக அத்தியாவசிய தேவைகளுக்காக பொது இடங்களுக்கு வருவோர் கண்டிப்பாக தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்
கொரோனா நோய் தொற்று அறிகுறி தென்பட்ட உடன் அருகில் உள்ள மருத்துவமனைகளை நாட வேண்டும்
தொற்று அறிகுறி தென்பட்டால் மருத்துவர்களின் ஆலோசனை உடனடியாக பெறுவது அவசர அவசியமானது
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமலாகியுள்ள முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.