ஐதராபாத்: போராட்டம் எதிரொலியாக பயிற்சி மருத்துவர்களின் ஸ்டைபன்ட் 15% உயர்த்தி தெலுங்கானா அரசு உத்தரவிட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பயிற்சி மருத்துவர்கள், வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் என அனைத்து தரப்பினரும் பணியாற்ற மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் பணியில் ஈடுபட்டு வரும் பயிற்சி மருத்துவர்கள், மாநில அரசு ஏற்கனவே உறுதி அளித்தபடி ஸ்டைபன்ட் உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், அதை மாநில அரசு கண்டுகொள்ளாத நிலையில், பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 26ந்தேதி முதல் பணிப்புறக்கணிப்பு நடைபெற்று வருகிறது. இதையடுத்து மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், பயிற்சி மருத்துவர்களின் ஸ்டைபன்ட் சம்பள தொகை 15 சதவீதம் உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்து உள்ளத.
இதுகுறித்து தெலுங்கானா மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐதராபாத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் சார்பில், மூத்த பயிற்சி மருத்துவர்களின் சம்பள தொகையை மாதம் ஒன்றிற்கு ரூ.70 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரத்து 500 ஆக, 15 சதவீதம் அளவுக்கு உயர்த்தி வழங்குவதற்கான ஒப்புதல் கோரப்பட்டது. இதை ஆய்வு மாநில அரசு, மூத்த பயிற்சி மருத்துவர்களின் சம்பள தொகை மாதம் ஒன்றிற்கு ரூ.70 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரத்து 500 ஆக அரசு உயர்த்தி வழங்க இருக்கிறது. இந்த உயர்வு 2021ம் ஆண்டு ஜனவரி 1ந்தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது என தெரிவித்து உள்ளது.