கோவை: கொரோனா  தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள கோவையில்,  அம்மா உணவகங்களில் திமுக செலவில் இலவச உணவு வழங்கப்படும் என அமைச்சர்கள் அறிவித்து உள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. இதுவரை தலைநகர் சென்னையில் பாதிப்பு உச்சம்பெற்றிருந்த நிலையில், தற்போது சென்னையில் குறைந்த கோவை உள்பட சில மாட்டங்களில் தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது.  டந்த இரண்டு நாட்களாக கோவையில் ஏராளமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்

.இதன்காரணமாக,கோவை மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சிறப்பு ஏற்பாடுகள் செய்ய தமிழக அரசு   சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்களையும் கண்காணிக்க கூறி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை திவிரப்படுத்தி வருகிறது

இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வேலையின்றி தவிக்கும் சாமானிய மக்களின் பசியைப் போக்கும் வகையில் கடந்த ஆட்சியின்போது நிறைவேற்றபட்டதுபோல, அம்மா உணவகங்கள் மூலம் இலவச உணவு வழங்க திமுக ஏற்பாடு செய்துள்ளது.

இந்த அம்மா உணவகங்களில் காலை உணவாக இட்லியும், மதிய உணவாக சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதமும் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினசரி ஒவ்வொரு அம்மா உணவகங்களிலும் ஒரு நாளைக்கு 500 நபர்கள் வீதம், 15 அம்மா உணவகங்களில் 7500 நபர்கள் முதல் 10 ஆயிரம் நபர்கள் வரை உணவு உண்டு வருகின்றனர். இதற்கென மாதம் ஒன்றுக்கு தலா ஒரு அம்மா உணவகத்திற்கு ரூபாய் 3.50 லட்சம் வீதம், 15 அம்மா உணவகங்களுக்கு 52.5 லட்சம் செலவிடப்படும்

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் உணவின்றி யாரும் சிரமப்படக் கூடாது என்ற உன்னத நோக்கில் 15 அம்மா உணவகங்களிலும் இலவசமாக பொதுமக்கள் ஏழை, எளியோர் சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கப்படும் எனவும் இதற்காக செலவாகும் தொகையை திமுக மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச உணவுகள் வழங்கப்படும் என்றும் அதன் செலவுகளை திமுக ஏற்கும் என்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.