சென்னை: யாரோ டெல்லிக்குச் சென்றதால் எதையும் மாற்ற முடியாது  என முதல்வர் மாற்றம் குறித்த கேள்விக்கு எடியூரப்பா பதில் தெரிவித்தார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக முதல்வர் எடியூரப்பா தலைமையில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

இந்த கூட்டம் முடிவடைந்து செய்தியளார்களை சந்தித்த முதல்வர் எடியூரப்பாவிடம் செய்தியாளர்ளிடம் போதும், மாநிலத்தில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்டுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.  வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றவர், அனைத்து எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கோவிட் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அப்போது செய்தியாளர்கள் குறுக்கிட்டு, முதல்வரை மாற்றம்  செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த முதல்வர் எடியூரப்பா,  யாரோ டெல்லிக்குச் சென்றதால் எதையும் மாற்ற முடியாது என்று அதிருப்தியாளர்களை கடுமையாக சாடியவர், டெல்லி சென்றவர்கள் பொருத்தமான பதில்களுடன் ‘திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றவர்,  மாநிலத்தில் தலைமை மாற்றம் என்பது வதந்தியே என்றும் கூறினார்.