கோவை: கோவை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 2அமைச்சர்கள் நியமனம் செய்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் வேலுமணி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதுபோல உயிரிழப்புகளும் உயர்ந்து வருகின்றனர். இதுவரை தலைநகர் சென்னையே கொரோனா பாதிப்பில் முதலிடத்தை பிடித்து வந்த நிலையில், நேற்றைய நிலவரப்படி, கோவையில் அதிக பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் 3,561 பேரும் கோவையில் 4,268 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து கோவையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, கண்காணிக்க 2 அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலின் நியமித்து உள்ளார்.
’’கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். மாவட்டத்தில் உள்ள மின் மயானத்தில் சடலங்களை எரிக்க இடம் இல்லாமல் உள்ளது. இதை சரி செய்ய வேண்டும். அதிகமான வாகனங்களை வைத்து கிருமிநாசினி மருந்துகள் அடிக்க வேண்டும். ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழப்புகளைத் த டுக்க முறையான கணிப்புகள் நடத்த வேண்டும். கூடுதலாக பரிசோதனைகளை நடத்த வேண்டும்.
இச்சூழலில் மக்களைக் காப்பாற்றுவதுதான் முக்கியம். அதை ஆளும் அரசுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளோம். மாவட்டத்தில் அதிமுகவினரைப் பொதுமக்களுக்கு உதவிகள் செய்ய அனுமதி அளிப்பதில்லை. நாங்கள் அனுமதி கேட்கும் இடத்தில் இருக்கிறோம். பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்க சென்றால், அதிமுகவினர் மீது வழக்குப் பதிந்து விடுவோம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.