சென்னை: தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமடைந்து வந்த நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்துள்ளது. மேலும் கொரோனா 3வது அலை வந்தாலும், அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி மற்றும் அயராத தொடர் முயற்சி, ஆலோசனை, அறிவுறுத்தல்கள் காரணமாக, தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்துவதில் வெற்றி காணப்பட்டு வருகிறது. ஆட்சி பதவி ஏற்ற காலக்கட்டத்தில் உச்சமடைந்திருந்த தொற்றின் பாதிப்பு, திமுக அரசின் நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் போன்றவற்றால், தற்போது படிப்படியாக குறைக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையே இல்லை என்ற அளவுக்கு கட்மைப்பும் வலுப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழக தொழில்துறை அமைச்சசர் தங்கம் தென்னரசு, ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியின் விவரம் இங்கே வெளியிடப்பட்டு உள்ளது.
புதிய அரசு பதவியேற்றபோது தமிழ்நாட்டில் ஆக்சிஜன் நிலவரம் என்னவாக இருந்தது?
புதிய அரசு பதவியேற்ற தருணத்திலேயே இந்தியா முழுவதும் ஆக்சிஜனை ஒதுக்கீடு செய்யும் பொறுப்பை மத்திய அரசு எடுத்துக்கொண்டிருந்தது. அப்போது தமிழ்நாட்டின் தேவை என்பது தினமும் 400- 450 மெட்ரிக் டன் என்ற அளவில் இருந்தது. ஆனால், மத்தியத் தொகுப்பிலிருந்து தமிழ்நாட்டிற்கான ஒதுக்கீடு என்பது 220 மெட்ரிக் டன்னாக இருந்தது.
அப்போதுதான் மாநிலத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீரியம் பெறத் துவங்கியிருந்தது. ஆகவே, நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவேகமாக அதிகரித்துவந்தது. ஆகவே, பதவியேற்றவுடனேயே ஆக்சிஜன் தேவைதான் முதலில் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்குமென முதலமைச்சர் கூறினார். ஆகவே, எங்கெல்லாம் ஆக்சிஜன் கிடைக்கும் என்பதைப் பார்த்து விரைவில் அவற்றை வாங்கி தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர முடிவுசெய்தோம்.
ஆனால், அந்தத் தருணத்தில் தமிழ்நாட்டிற்கான ஒதுக்கீடு என்பது வெறும் 220வது மெட்ரிக் டன்னாகத்தான் இருந்தது. ஆகவே உடனடியாக தமிழகத்திற்கான ஒதுக்கீட்டை உயர்த்தித் தரச்சொல்லிக் கேட்டோம். முதலமைச்சர் இது தொடர்பாக பிரதமருக்குக் கடிதம் எழுதினார். மத்திய அரசு தமிழகத்திற்கான ஒதுக்கீட்டை 519 மெட்ரிக் டன்னாக அதிகரித்தது.
ஆனால், அந்தத் தருணத்தில் தமிழ்நாட்டிற்கான ஒதுக்கீடு என்பது வெறும் 220வது மெட்ரிக் டன்னாகத்தான் இருந்தது. ஆகவே உடனடியாக தமிழகத்திற்கான ஒதுக்கீட்டை உயர்த்தித் தரச்சொல்லிக் கேட்டோம். முதலமைச்சர் இது தொடர்பாக பிரதமருக்குக் கடிதம் எழுதினார். மத்திய அரசு தமிழகத்திற்கான ஒதுக்கீட்டை 519 மெட்ரிக் டன்னாக அதிகரித்தது.
ஆனால், அந்தத் தருணத்தில் தமிழ்நாட்டிற்கான ஒதுக்கீடு என்பது வெறும் 220வது மெட்ரிக் டன்னாகத்தான் இருந்தது. ஆகவே உடனடியாக தமிழகத்திற்கான ஒதுக்கீட்டை உயர்த்தித் தரச்சொல்லிக் கேட்டோம். முதலமைச்சர் இது தொடர்பாக பிரதமருக்குக் கடிதம் எழுதினார். மத்திய அரசு தமிழகத்திற்கான ஒதுக்கீட்டை 519 மெட்ரிக் டன்னாக அதிகரித்தது.
ஆனால், 450 டன்னாக இருந்த ஆக்சிஜன் தேவை வெகுவேகமாக அதிகரிக்க ஆரம்பித்தது. மத்திய அரசு 519 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்தாலும், கிடைக்கும்போது 470 – 480 டன் ஆக்சிஜன்தான் கிடைத்தது. இதற்குள் தமிழகத்தின் தேவை 650 மெட்ரிக் டன்னாக உயர்ந்தது. ஆகவே இன்னும் 180 மெட்ரிக் டன் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை இருந்தது.
அப்போதுதான் வெளிநாட்டில் இருந்து ஆக்சிஜனை வரவழைக்க முடிவுசெய்தோம். இதற்குத் தேவையான க்ரையோஜெனிக் கண்டெய்னர்கள் அதாவது தாழ் வெப்பநிலை கொள்கலன்கள் நம்மிடம் இல்லை. முதலில் அவற்றுக்கு ஏற்பாடு செய்தோம். அதற்குப் பிறகு முதன்முதலில் நெதர்லாந்தில் இருந்து 80 டன்கள் ஆக்சிஜன் வரவழைக்கப்பட்டது. அதற்குப் பிறகு மேற்கு வங்கத்தில் இருந்து ஆக்சிஜனை வாங்க ஆரம்பித்தோம்.
இதற்கிடையில் ஸ்டெர்லைட் ஆலையை நடத்த அனுமதி கிடைத்து. அந்த ஆலை நடுவில் பழுதாகி, பிறகு பழுது நீக்கப்பட்டு மீண்டும் இயங்க ஆரம்பித்தது. அந்த ஆலையிலிருந்து தினமும் 30 மெட்ரிக் டன் உற்பத்தியாகிறது. இதற்குப் பிறகு ஜேஎஸ்டபிள்யு ஸ்டீலில் ஆக்சிஜனின் உற்பத்தி 10 மெட்ரிக் டன்னிலிருந்து 16 டன்னாக உயர்த்தப்பட்டது.
ஆகவே, பதவியேற்ற பிறகு முதலில் மத்திய அரசிடம் அனுமதி, பிறகு ஆக்சிஜன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி, பிறகு இங்கேயே உற்பத்தியை அதிகரிப்பது என்பதாக எங்களுடைய நடவடிக்கை அமைந்தது.
இனி தமிழ்நாட்டில் புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைப்பது என்பதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். டிட்கோவுடன் இணைந்து புதிய ஆலைகளைத் துவங்க பலர் முன்வந்திருக்கிறார்கள். தற்போது புகழூர் காகித ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியைத் துவங்கவிருக்கிறோம்.
இந்தியா முழுவதுமே ஆக்சிஜனுக்கான தேவை இருந்தது. இதில் தமிழகத்திற்கான ஆக்சிஜனைப் பெறுவதில் பிரச்னை இருந்ததா?
தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தபோது வட மாநிலங்களில் எண்ணிக்கை குறைய ஆரம்பித்திருந்தது. ஆகவே, பெரிய அளவில் ஆக்சிஜனை வாங்குவதில் சிரமம் இல்லை. ஆகவே ஒதிஷா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து தொடர்ச்சியாக வாங்க ஆரம்பித்தோம்.
வெளிநாட்டில் இருந்து ஆக்சிஜனை இறக்குமதி செய்வதில் சவால்கள் இருந்தனவா?
இருந்தன. ஆனால், அவற்றைச் சமாளிக்க முடிந்தது. இங்குள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களின் அதிகாரிகள் வெளிநாட்டில் உள்ள தங்களுடைய நிறுவனங்களோடு தொடர்புகளை ஏற்படுத்தினார்கள். பிறகு, அனுமதிகளைப் பெற்று அவற்றை இறக்குமதி செய்தோம்.
தாழ்வெப்ப நிலை கொள்கலன்கள் – நெதர்லாந்து நாட்டின் தலை நகர் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து விமானப்படை விமானங்கள் வாயிலாக கொண்டுவரப்பட்டுள்ளது
தமிழ்நாட்டிற்கான ஆக்சிஜன் தேவையை மேற்கு வங்கம், ஒதிஷா போன்ற மாநிலங்களே நிறைவுசெய்துவந்த நிலையில், தற்போது மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வாங்கப்படுகிறது. என்ன காரணம்?
ஆக்சிஜன் வாங்கத் துவங்கியபோது கிழக்கு மாநிலங்களில் இருந்து வாங்குவது என்று முடிவுசெய்தோம். ஆகவே ரூர்கேலா, துர்காபூர், ஜாம்ஷெட்பூர், கலிங்கானா போன்ற நகரங்களில் இருந்துதான் நமக்கான ஆக்சிஜன் வந்தகொண்டிருந்தது. வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் ஒதிஷா, மேற்கு வங்க மாநிலங்களில் கரையைக் கடக்கும் எனத் தெரியவந்தபோது, ரயில் போக்குவரத்து பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது. ஆகவே மேற்கு மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் வாங்க முடிவுசெய்தோம். அதன்படி தற்போது இரண்டு, மூன்று நாட்களாக மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் வாங்கி வருகிறோம்.
ரயில் மூலம் ஆக்சிஜன் கொண்டுவரப்படும்போது இதற்கான செலவை யார் ஏற்பது? ரயில்வே ஏற்றுக்கொள்ளுமா?
இல்லை. கண்டெய்னர், ஆக்சிஜன், ரயிலில் கொண்டுவருவதற்கான செலவு அனைத்தையுமே மாநில அரசுதான் ஏற்க வேண்டும். நாம்தான் ஏற்றுக்கொள்கிறோம்.
பொதுவாக மாநிலத்தின் மருந்துத் தேவையை பூர்த்தி செய்வது தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம்தான். தொழில்துறை ஏன் இதில் ஈடுபடுகிறது?
ஆக்சிஜனை கொள்முதல் செய்வதற்கான முதன்மை அதிகாரியாக தொழில்துறை செயலர் நியமிக்கப்பட்டார். தவிர, பல தொழிற்சாலைகளில் துணைப் பொருளாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தக் காரணங்களால் தொழில்துறை இதில் ஈடுபடுகிறது. ஆனால், எந்த மாவட்டத்திற்கு எவ்வளவு அனுப்ப வேண்டும் என்பதை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம்தான் முடிவுசெய்கிறது.
ஆக்சிஜனுக்கு மட்டுமல்லாது, மருத்துவமனைகளில் திரவநிலை ஆக்சிஜனை நோயாளிகளின் படுக்கைக்கு எடுத்துச் செல்லும் தாமிர பைப்கள், டி – டைப் சிலிண்டர்கள் ஆகியவற்றுக்கும் தட்டுப்பாடு இருப்பதைப் போலத் தெரிகிறது.
ஆரம்பத்தில் டி – டைப் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு இருந்தது. அதனால் அவற்றை சிங்கப்பூரில் இருந்து வரவழைத்தோம். இந்த சிலிண்டர்கள் மிக முக்கியமானவை. திரவ நிலை ஆக்சிஜன் கொள்கலன்களை வைக்க முடியாத இடத்தில் இந்த சிலிண்டர்கள் மூலம்தான் நோயாளிகளுக்கு ஆக்சிஜனை அளிக்க முடியும். தாமிர பைப்களுக்கு தேவை இருக்கிறது, கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி வருகிறோம்.
தமிழ்நாடு அரசு சொந்தமாக ஏன் ஆக்சிஜன் உற்பத்தியில் ஈடுபடவில்லை?
கொரோனா சூழல் இல்லாவிட்டால் இவ்வளவு தேவை இருக்காது. இப்போது தேவை இருப்பதால் தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான புகவூர் காகித ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியைத் துவக்கவிருக்கிறோம். எதிர்காலத்தில் இந்த உற்பத்தி வெகுவாக உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி: பிபிசி தமிழ்