ஜார்கண்ட் மாநிலத்தில் நிகழும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாகவும், அனாதை பிணங்களை போல் புதைக்கப்படுவதாகவும் பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் எண்ணற்ற பிணங்கள் புதைக்கப்பட்டுள்ளதை ஊடகங்கள் படம்பிடித்து காட்டியதை தொடர்ந்து அந்த பிணங்களை அடையாளம் காட்டியதாக அதன் மேல் போர்த்தப்பட்ட துணிகளை அகற்றினர், இப்படி பிணத்தில் கூட பா.ஜ.க. அரசு அரசியல் செய்வதாக ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியிருந்தார்.

 

இதற்கு பதிலடியாக அந்த மாநில பா.ஜ.க.வினர் சடலங்களுக்கு உரிய இறுதி மரியாதை கூட செய்யாமல் அனாதை பிணங்களைப் போல் புதைப்பதாகவும், மரணங்களின் எண்ணிக்கை குறித்து காட்டப்படுவதாகவும் ஹேமந்த் சோரன் மீது குற்றம் சாட்டினர்.

மாநில அரசு எந்தவித குளறுபடியும் செய்யவில்லை, மத்திய அரசின் இணையதளத்தில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்களாலும் கோளாறுகளால் தான் இதுபோன்ற நிலை உள்ளது, வேண்டுமென்றால் மத்திய அரசு அதிகாரிகள் வந்து தரவுகளை தணிக்கை செய்துகொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.

ஜார்கண்டை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலமும் மத்திய அரசை வந்து தணிக்கை செய்து பார்த்துக்கொள்ள அழைப்பு விடுத்திருக்கிறது, இதேபோல் மற்ற அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசு தணிக்கை செய்து உண்மையான மரண எண்ணிக்கையை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.