கோவையின் முக்கிய இடங்களில் இன்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பெரிய நகரங்களில் நடமாடும் மினி கிளினிக்குகள் மூலமாகவும், மற்ற பகுதிகளில் ஆரம்ப சுகாதார மையம் மூலமாகவும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்திற்கு மிக குறைந்த அளவு தடுப்பூசிகளையே மத்திய அரசு அனுப்பி உள்ள போதும், அதை பரவலாக அனைத்து மாவட்டங்கள் மற்றும் முக்கிய நகரங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது தமிழக அரசு.
சத்தமே இல்லாம தமிழகத்தில் ஒரு #VaccinationDrive பெரிய அளவில் நடந்துகொண்டு இருக்கு
பெரிய நகரங்களில் நடமாடும் மினி கிளினிக் மூலமும், பிற மாவட்டங்களில் PHC மூலமும் பல்லாயிரக்கணக்கான ஊசிகள் போடப்படுது
CoWin பார்த்து தமிழக அரசு மீது குறை சொல்வோர் விரைவில் சாதனை செய்தி அறிவார்கள். pic.twitter.com/ED4JWaPQMb
— Satheesh Kumar (@saysatheesh) May 26, 2021
அந்தந்த பகுதிகளில் உள்ள மாற்று திறனாளிகள், பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளவர்கள் என்று அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவையில் பல்வேறு இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.