திருச்சி: டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க 4 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழகஅரச நியமித்து உள்ளது. அதன்படி, தஞ்சை மாவட்டத்துக்கு பிரதீப் யாதவ், திருவாரூர் மாவட்டத்துக்கு கே.கோபால், நாகை மாவட்டத்துக்கு அபூர்வா, மயிலாடுதுறை மாவட்டத்துக்கு கிர்லோஷ் குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரியலூர், கரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சையில் காவிரி தூர்வாரப்படுகிறது.
அரியலூர், கரூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டத்திற்கு ஏற்கனவே உள்ள அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.