சென்னை: செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழகம் ஏற்பதே மிகச்சிறந்த தீர்வு என பாமக எம்.பி.  அன்புமணி ராமதாஸ் தமிழகஅரசை வலியுறுத்தி உள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  செங்கல்பட்டு #HLLbiotech நிறுவனத்தின் #Vaccine ஆய்வகத்தை நேற்று  நேரில் ஆய்வு செய்தார். அதையடுத்து, அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியவர்,  உடனடியாகத் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கிடும் முயற்சிகளை மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டதாகவும்,  தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும்,  மத்திய அரசும் நிதி ஒதுக்கீடு செய்து உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இநத் நிலையில்,  செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசு ஏற்று நடத்தினால் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மிகவும் எளிதாகவும், குறைந்த செலவிலும் தயாரிக்க முடியும், இதை உணர்ந்து மத்திய அரசிடம் பேசி, செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என பாமக எம்.பி.   அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,