சென்னை: தலைமை செயலகத்தில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என துறை தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர்  இறையன்பு அறிவுறுத்தி உள்ளார்.

‘சென்னை தலைமை செயலகத்தில் அவசியமாக தேவைப்படும் பணியாளர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதி அளிக்கப்படும் என்று தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். இணைநோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்றை தடுக்க உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஊழியர்களுக்கு வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.