டில்லி

நேற்று இந்தியாவில் 22,17,320 மாதிரிகள் கொரோனா பரிசோதனை  செய்யப்பட்டுள்ளன.

இரண்டாம் அலை கொரோனா பரவலால் இந்தியாவில் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.  நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,08,714 பேர் அதிகரித்து மொத்தம் 2,71,56,382 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,159 அதிகரித்து மொத்தம் 3,11,421 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 2,95,085 பேர் குணமாகி  இதுவரை 2,43,43,299 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 24,90,876 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தற்போது சரியான சிகிச்சை பரிந்துரைக்கப்படாத நிலையில் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் மிகவும் அவசியமானதாகும்.  எனவே இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இதையொட்டி கொரோனா  பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் நேற்று 22,17,320 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.   இதுவரை 33,48,11,496 மாதிரிகள் கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  தமிழகத்தில் நேற்று 1,71,806 மாதிரிகள் சோதிக்கப்பட்டு இதுவரை 2,66,41,622 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.