சென்னை: தமிழகத்தில் உள்ள  பள்ளிகளில் போக்சோ விதிகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது குறித்து  ஆய்வு செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார், தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

“தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் போக்சோ விதிகளின் அடிப்படையிலான வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்” என இன்று கடிதம் எழுதியுள்ளேன் என ரவிக்குமார் எம்.பி. தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.