சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் புகழ்பெற்ற பத்ம சோஷத்ரி பால பவன் (பிஎஸ்பிபி) பள்ளியில் கணக்குபதிவியல் மற்றும் வணிக பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ராஜகோபாலனுக்கு எதிராக பாலியல் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி சமூகவலைதளங்களில் பிரபலங்கள் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிகழ்வை விஷ்ணு விஷால் நடிப்பில், அண்மையில் வெளியான ராட்சசன் திரைப்படத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி பலரும் சமூக வலைதளங்களில் எழுதி வருகின்றனர். வகுப்பறையிலேயே பள்ளி மாணவிகளிடம் அத்துமீறும் இன்பராஜ், எனும் கதாபாத்திரம் ராஜகோபாலன் ஒப்பிட்டு அனைவராலும் பேசப்பட்டு வந்த நிலையில், இது குறித்து பேசியுள்ள திரைப்படத்தின் இயக்குனர் ராம்குமார், இன்பராஜ் கதாபாத்திரம் சுயமாக உருவாக்கப்படவில்லை என்றும், பல உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு தான் இன்பராஜ் கதாபாத்திரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பத்மா சேஷாத்திரி பள்ளியில் நடைபெற்றுள்ள சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்கள் இன்பராஜ் கதாபாத்திரத்தை விட கொடூரமானவர்கள் என்றும் தனது பதிவில் ராம்குமார் குறிப்பிட்டுள்ளார்.
ராட்சசன் இன்பராஜ் கதாபாத்திரம் சுயமாக உருவாக்கம் செய்யபடவில்லை. பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டது. அந்த சம்பவங்களின் குற்றவாளிகள் இன்பராஜை விட மோசமானவர்களாக இருந்தார்கள்!#PSBB https://t.co/cOSvUGWV9Y
— Director Ramkumar (@dir_ramkumar) May 24, 2021