சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 34,867 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 4985 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழகத்தில்,நேற்று ஒரேநாளில் 34,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.எனவே,கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18,77,211 ஆக அதிகரித்துள்ளது. நேற்று பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில், ஒருவர் புதுச்சேரியை சேர்ந்தவர். தொற்று கண்டறியப்பட்டவர்களில் 19,421 ஆண்களும், 15,446 பெண்களும் அடங்குவர். சென்னைக்கு அடுத்ததாக 4,277 பேர் கோவையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று ஒரேநாளில் 404 பேர் உயிரிழந்த நிலையில்,கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,872ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 27,026 பேர் சிகிச்சையிலிருந்து குணம் பெற்றுள்ளனர்.
தலைநகர் சென்னையில் 4985 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 404 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர். தற்போது 3,01,580 பேர் நோய் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் நேற்று 4,985 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 4,83,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 81 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 6,460 பேர் மரணம் அடைந்துள்ளனர். 5,870 பேர் குணம் அடைந்து மொத்தம் 4,29,146 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது சென்னையில் 48,151 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
[youtube-feed feed=1]