சென்னை

மிழகத்தில்  இன்றைய (24/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 34,867 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,77,211 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 20,872 பேர் உயிர் இழந்து 15,54,759 பேர் குணம் அடைந்து தற்போது 3,01,580 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 4,985 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 4,83,757 பேர் பாதிக்கப்பட்டு 6,460 பேர் உயிர் இழந்து 4,29,146 பேர் குணம் அடைந்து தற்போது 47,151 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 1,43,164 பேர் பாதிக்கப்பட்டு 1,048 பேர் உயிர் இழந்து 1,08,791 பேர் குணம் அடைந்து தற்போது 33,325 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,30,587 பேர் பாதிக்கப்பட்டு 1,542 பேர் உயிர் இழந்து 1,12,788 பேர் குணம் அடைந்து தற்போது 16,257 பேர் சிகிச்சையில் உள்ளனர்.