டெல்லி: கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்குகளால் இந்தியாவில்வேலையின்மைவிகிதம் 14.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என இந்திய பொருளாதாரக் கண்காணிப்புமையம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஒரு வருடத்தில் மிகப்பெரிய சரிவு என்று விமர்சித்துள்ளது.
2021 மே 16 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வேலையின்மை விகிதம் 14.5% ஆக உயர்ந்துள்ளது, , இது ஏப்ரல் மாதத்தில் 8% ஆக இருந்தது என்று இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி,
இந்தியாவில் மார்ச் மாதம் 6.50% ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம், ஏப்ரல் மாத முடிவில் 7.97 சதவிகிதமாக உயர்ந்திருந்தது.
தற்போது, அது மே 16-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 14.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஓராண்டில் இல்லாத அதிகபட்ச வேலையின்மை ஆகும்.
மே 19 வரையிலான கடந்த 30 நாட்களில் மட்டும் நாட்டின் வேலையின்மை விகிதம் 9.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது நகர்ப்புறத்தில் 11.8 சதவிகிதமாகவும் , கிராமப்புறத்தில் 8.8 சதவிகிதமாகவும் உள்ளது.
நகரங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மே 1 ந்தேதி 9.60 சதவிகிதமாக இருந்த நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம், மே 19 ந்தேதி 11.77 சதவிகிதமாக உயர்ந்துள்ளது .
கொரோனா முதல் அலைக்குப் பிறகு , நிலைமை சற்று மேம்பட்டு வந்தது. ஆனால், 2- ஆவது அலை , கடந்த 6 மாதத்தில் ஏற்பட்ட வேலைவாய்ப்பு , வளர்ச்சியையும் முழுமையாக பறித்துக் கொண்டு விட்டது என்று குறிப்பிட்டுள்ளது .
கடந்த ஆண்டு (2020) நாடு முழுவதும் பூட்டப்பட்ட காலத்தில் வேலையின்மை விகிதம் 23% க்கும் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.