சென்னை: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, தமிழக சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்காத 2அமைச்சர்கள் உள்பட 9 பேர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், இன்று எம்எல்ஏக்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு சபாநாயகர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
2 அமைச்சர்கள் உட்பட பதவியேற்காத 9 பேர் எம்எல்ஏக்களாக இன்று பதவியேற்பு
- குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்,
- ராசிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சர் மதிவேந்தன்,
- விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினர், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்,
- கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு
- வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.காந்திராஜன்,
- அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர், முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா,
- ஒரத்தநாடு சட்டப்பேரவை உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம்,
- செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினர் வரலட்சுமி,
- அந்தியூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடாசலம்
ஆகிய 9 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று முறைப்படி சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் சட்டப்பேரவை உறுப்பினர்களாகப் பதவி ஏற்றனர். அப்போது முதல்வர் ஸ்டாலின், முன்னவர் துரைமுருகன், அரசு கொறடா உள்ளிட்டோர் அவையில் இருந்தனர்”.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.