புதுடெல்லி:
கொரோனா 3-வது அலை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டுவிட்டு. நாங்கள் 3வது அலையை எதிர்பார்க்கவில்லை என்று மத்திய அரசு கூற முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி மெதுவாக நடக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார் அதில், “தடுப்பூசி செலுத்தும் பணி மெதுவாக நடக்கிறது.

ஜூலை மாத இறுதிக்குள் 30 கோடி இந்தியர்களுக்கு தடுப்பூசி செலுத்தி முடிப்போம் என்று மோடி அரசு 2021,ஜனவரியில் தெரிவித்தது. ஆனால், உண்மையில் மே 22ம் தேதிவரை 4.1 கோடி இந்தியர்களுக்கு மட்டுமே 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

2021ம் ஆண்டு இறுதிக்குள் இளைஞர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், மே 21ம் தேதி உண்மையில் நாட்டில் 14 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த தேசத்துக்குத் தேவை தடுப்பூசிதான் முதலைக்கண்ணீர் அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ டிசம்பர் 31ம் தேதிக்குள் 216 கோடி டோஸ் தடுப்பூசி கிடைக்கும், ஒட்டுமொத்த பதின்ம வயதினருக்கும் முழமையாகத் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய சுகதாாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். தரவுகளால் தேதி பாதுக்காக்கபட வேண்டும்.

உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தயாரிக்கும் தடுப்பூசி, வெளிநாடுகளில் ஆர்டர் செய்யப்பட்ட எண்ணிக்கை, இறக்குமதி விவரங்கள், இறக்குமதி செய்யப்படும் தேதி ஆகியவை குறித்து புள்ளிவிவரங்கள் தேவை. இதுவரை ஏதும் வெளியிடப்படவில்லை.