டில்லி
உலகத்தவர்களில் கொரோனாவை மிகவும் மோசமாகக் கையாண்டவர் மோடி என ஆஸ்திரேலிய கருத்துக் கணிப்பில் 90% பேர் தெரிவித்துள்ளனர்.
உலகெங்கும் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து வருகிறது. இதில் மொத்த பரவலில் அமெரிக்கா, இந்தியா, பிரேஸில் ஆகிய நாடுகள் முறையே முதல் 3 இடங்களில் உள்ளன. இந்த நாடுகளின் தலைவர்கள் கொரோனாவை மோசமாக் கையாண்டு வருவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ஆஸ்திரேலியாவின் தி கன்வர்சேஷன் என்னும் செய்தி தளம் கருத்துக் கணிப்பு நிகழ்த்தியது.
இந்த கருத்துக் கணிப்பில் கொரோனாவை மோசமாகக் கையாண்ட உலக தலைவர்கள் யார் யார் எனக் கேட்கப்பட்டது. இதில் பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் போல்செனரோ, முன்னாள் அமெரிக்க அதிபர் டிர்மப், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லூகாசென்கோ ஆகியோர் பெயர் தரப்பட்டன. சமீபத்தில் இந்த கருத்துக் கணிப்புக்களின் முடிவுகள் வெளியாகி உள்ளன.
இந்த கருத்துக் கணிப்பில் 75,740 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இவர்களில் 90% பேர் மோடிக்கு வாக்கு அளித்துள்ளனர். அதாவது பிரேசில், பெலாராஸ், அமெரிக்க முன்னாள் அதிபர் ஆகியோரை விட கொரோனாவை கையாள்வதில் பிரதமர் மோடி மிகவும் மோசமாகச் செயல்பட்டதாக மக்களில் பெரும்பாலானோர் வாக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.