டில்லி

ந்தியாவில் நேற்று 2,40,766 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,40,766 பேர் அதிகரித்து மொத்தம் 2,65,28,846 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,736 அதிகரித்து மொத்தம் 2,99,296 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 3,54,825 பேர் குணமாகி  இதுவரை 2,34,18,523 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 28,00,403 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 26,133 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 55,53,225 ஆகி உள்ளது  நேற்று 682 பேர் உயிர் இழந்து மொத்தம் 87,300 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 40,294 பேர் குணமடைந்து மொத்தம் 51,11,095 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,52,247 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 31,183 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 23,98,925 ஆகி உள்ளது  இதில் நேற்று 481 பேர் உயிர் இழந்து மொத்தம் 24,658 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 61,766 பேர் குணமடைந்து மொத்தம் 18,91,042 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,83,204 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 35,873 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 23,22,147 ஆகி உள்ளது.  இதில் நேற்று 176 பேர் உயிர் இழந்து மொத்தம் 7,171 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 45,400 பேர் குணமடைந்து மொத்தம் 20,25,319 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,89,280 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 35,873 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,06,861 ஆகி உள்ளது  இதில் நேற்று 448 பேர் உயிர் இழந்து மொத்தம் 20,046 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 25,776 பேர் குணமடைந்து மொத்தம் 15,02,537 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,84,278 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 5,964 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,65,176 ஆகி உள்ளது.  நேற்று 218 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 18,978 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 17,540 பேர் குணமடைந்து மொத்தம் 15,51,716 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 94,482 பேர் சிகிச்சையில் உள்ளனர்.