டெல்லி: தடுப்பூசி திட்டத்தை விரைவு படுத்துங்கள் என மோடி அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.

70% மாவட்டங்களில் 100 பேரில் 20-க்கும் குறைவானவர்களே தடுப்பூசி போட்டுள்ளனர் ; தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்என டிவிட் பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை  தீவிரமான தாக்கத்தை உருவாக்கி வருகிறது. தினசரி பாதிப்பு இரண்டரை லட்சமாக உள்ளது. தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி போடும் திட்டத்தை  மத்தியஅரசு அமல்படுத்தி உள்ளது. ஆனால், தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஒருபுறம் எழுந்துள்ள நிலையில், அதுதொடர்பான அதிருப்தியும் மக்களிடையே எழுந்துள்ளது. இதனால், பலர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயங்கி வருகின்றனர்.

கொரோனா விவகாரத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசு முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், ராகுல் காந்தி இன்று பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இந்தியாவில் 70% மாவட்டங்களில் 100 பேரில் 20-க்கும் குறைவான மக்களே தடுப்பூசி போட்டு உள்ளதாக வெளியான நாளிதழ் ஒன்றை இணைத்து, தடுப்பூசியை விரைவுபடுத்த வேண்டும் எனவும் காலதாமதம் செய்யதீர்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.