தூத்துக்குடி:  தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தின் சார்பில் முதல்அமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.1கோடி நிதி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு  யோகா பயிற்சி வழங்கப்படுவதை  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி , சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் இன்று (22.05.2021) நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்பிக் நிறுவனத்தின் மூலம் முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதி ரூ.1 கோடிக்கான காசோலையையும், மாவட்ட ஆட்சியர் அவர்களின் தன் விருப்ப நிதிக்கு ரூ.1 கோடிக்கான காசோலையையும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் பெற்று மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், அவர்களிடம் வழங்கினார்கள்.
மேலும் ஸ்பிக் நிறுவனத்தின் மூலம் ரூ.28 லட்சம் மதிப்பில் 400 ஆக்சிஜன் ப்ளோ மீட்டர்களையும் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், அவர்களிடம் ஸ்பிக் நிறுவன முழு நேர இயக்குநர் எஸ்.ஆர்.ராமகிருஷ்ணன், துறைத்தலைவர் (நிர்வாகம்) கோபாலகிருஷ்ணன், முதுநிலை மேலாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாநகராட்சி நல அலுவலர் வித்யா, வட்டாட்சியர் ஜஸ்டின், சித்த மருத்துவ பிரிவு யோகா ஆசிரியர் சுமங்கலி, மருத்துவர் சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.