சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், வரும் 24ந்தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதையொட்டி, இன்றும், நாளையும் அனைத்து கடைகள், போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.  தமிழக அரசு போக்குவரத்துத் துறை சார்பில் இன்றும் நாளையும் 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில், இன்றும் நாளையும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி இன்றும், நாளையும் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.