சென்னை:
கொரானா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள கோயில் குருக்கள்களுக்கு நிவாரணப் பொருட்களை எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கொரானா ஊரடங்கால் கோயில்கள் அனைத்திலும் பொதுமக்கள் தரிசனம் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் குருக்கள்களுக்கு அரிசி-பருப்பு உள்ளிட்ட ஊரடங்கு கால நிவாரணப் பொருட்களை இன்று வழங்கினோம் என்று குறிப்பிட்டுள்ளார்.