புதுடெல்லி:
கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன் இந்தியா போராடி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன் இந்தியா போராடி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சீராம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத்பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்ஸின் ஆகியவற்றின் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, இதுவரை நாட்டில் 19.3 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், கோவிஷீல்ட், கோவேக்ஸின் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி மூன்றாவது தடுப்பூசியாக உள்ளது.

கொரோனாவுக்கு எதிராக போரில் இந்தியாவிற்கு வலுசேர்க்கும் விதமாக. இந்தியாவில் ஸ்பட்னிக் வி தயாரிப்பு இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தொடங்கும் என ரஷ்யாவிற்கான இந்திய தூதர் டி.பி.வெங்கடேஷ் வர்மா கூறியுள்ளார். செப்டம்பர்-அக்டோபர் மாதத்திற்குள் இந்தியாவில் 85 கோடி டோஸ் ஸ்பூட்னிக் வி உற்பத்தி செய்யப்படும் என்று அவர் கூறினார்.