இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஏர்இந்தியா இணையதளம் மீது சைபர் அட்டாக் நடத்தப்பட்டு உள்ளதாகவு, செர்வரில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பயனர்களின் 2011 முதல் பிப்ரவரி 2021 வரை பதிவு செய்யப்பட்டிருந்த தகவல்கள் கசிந்துள்ளன என தெரிவித்து உள்ளது. மேலும், பயனர்களின் பெயர், பிறந்த தேதி, தொடர்புத் தகவல், பாஸ்போர்ட் தகவல், டிக்கெட் தகவல், ஸ்டார் அலையன்ஸ் மற்றும் ஏர் இந்தியாவில் அடிக்கடி பயணிக்கும் பயணியர் தகவல்கள், அத்துடன் கிரெடிட் கார்டுகளின் விவரங்களும் கசிந்துள்ளன. கடந்த பிப்ரவரி மதம் இந்த தகவல் எங்களுக்க்கு கிடைத்தது. இருப்பினும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த உளோம்”
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.