திருச்சி: திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் மற்றும் அரசு மருத்துவமனையில்  படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா தடுப்பு மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு  சென்று நேரடி கள ஆய்வு செய்து வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், சேலம், திருப்பூர், கோவை மற்றும் மதுரை, திருச்சிக்கு  பயணம் மேற்கொண்டார். இன்று காலை மதுரையில் ஆய்வை முடித்துக்கொண்டு, பிற்பகல் திருச்சி வந்தடைந்தார். அங்கு ஆட்சியருடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர்  கார் மூலம் வருகை தந்தவர், திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா கள ஆய்வு செய்தார். பின்னர்   திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 400 படுக்கை வசதிகள்  கொண்ட கொரேனா கேர் சென்டரை தொடங்கி வைத்த பிறகு அங்கு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். பிறகு, அதே அரங்கில் அமைக்கப்பட்டுள்ள 100 படுக்கை வசதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த 100 படுக்கை படுக்கைகளில் 50 படுக்கைகள் ஆக்சிஜன் படுக்கைகளாகவும், 50 படுக்கையில் சாதாரண படுக்கைகளாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் மூன்று இடங்களில் 760 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையங்களை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.