திருமலை:
திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஜூன் மாத விரைவு தரிசன ஒதுக்கீடு இன்று வெளியிடப்படுகிறது.

காலை 9 மணி அளவில் இந்த இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். தினசரி 5 ஆயிரம் டிக்கெட்டுகள் சுவாமி தரிசன முன்பதிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தற்போது கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இலவச தரிசனம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால், தரிசன முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் மட்டுமே ஏழுமலையானின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel