புதுச்சேரி:
புதுச்சேரியில் அத்தியாவசிய கடைகள் இயங்கும் நேரத்தை குறைக்க முடிவு செய்யபட்டுள்ளது.

புதுச்சேரியில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த, நாள்தோறும் பகல் 12 மணி வரை அத்தியாவசிய கடைகள் இயங்குவதை, காலை 10 மணியாக குறைக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற கொரோனா மேலாண்மை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது .
இதன்படி நாள்தோறும் பகல் 12 மணி வரை மறுநாள் காலை 10 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக புதுசேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதேசமயம் காலை 10 வரை மட்டுமே கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
புதுவையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு மே 24 நள்ளிரவு வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவின் தற்போதைய சூழ்நிலை குறித்த வாராந்திர ஆலோசனை கூட்டம் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் புதுச்சேரி ராஜ்நிவாஸில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தும் விகிதத்தை அதிகப்படுத்துவது, பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், கட்டுப்பாடுகளையும் முறையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
[youtube-feed feed=1]