
புச்சிபாபு சனா இயக்கத்தில் வைஷ்ணவ் தேஜ் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் தியேட்டர்களில் வெளியான உப்பேனா தெலுங்கு படம் மூலம் பிரபலமானவர் க்ரித்தி ஷெட்டி. அந்த படத்தில் க்ரித்தியின் அப்பா கம் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் விஜய் சேதுபதி.
இந்நிலையில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படம் மூலமாக க்ரித்தி ஷெட்டி தமிழ் திரையுலகில் அறிமுகமாகவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது .
இந்நிலையில் புதுப்படங்கள் குறித்து க்ரித்தி ஷெட்டி விளக்கம் அளித்திருக்கிறார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
என் அடுத்த படங்கள் குறித்து நிறைய வதந்திகள் கேள்விப்படுகிறேன். தற்போதைக்கு நான் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன். நானிகாருவுடன் ஒரு படம், சுதீர் பாபு காரு, ராம் காருவுடன் தலா ஒரு படம். நான் ஒப்புக் கொண்ட படங்களை முடிப்பதில் தான் என் கவனம் எல்லாம் இருக்கிறது. நான் புதுப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டால் நிச்சயம் உங்களிடம் தெரிவிக்கிறேன்என பதிவிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]