சென்னை

மிழகத்தில்  இன்றைய (20/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 35,579 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 17,34,804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 19,131 பேர் உயிர் இழந்து 14,52,283 பேர் குணம் அடைந்து தற்போது 2,63,390 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 6,073 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 4,62,448 பேர் பாதிக்கப்பட்டு 6,105 பேர் உயிர் இழந்து 4,08,676 பேர் குணம் அடைந்து தற்போது 47,667 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 1,28,493 பேர் பாதிக்கப்பட்டு 942 பேர் உயிர் இழந்து 99,188 பேர் குணம் அடைந்து தற்போது 28,363 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,22,369 பேர் பாதிக்கப்பட்டு 1,395 பேர் உயிர் இழந்து 1,05,734 பேர் குணம் அடைந்து தற்போது 15,240 பேர் சிகிச்சையில் உள்ளனர்.