டெல்லி: இந்தியாவில், நாள் ஒன்றுக்கு 25 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.
டெல்லியிலுள்ள சஃப்டார்ஜுங் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், அங்கு நிறுவப்பட்டிருக்கும் ஆக்சிஜன் உற்பத்திக்கான இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,
நாடு முழுவதும் இதுவரை 32,03,01,177 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், அவற்றில் கடந்த ஒருநாளில் மட்டும் (மே 18ம் தேதி) 20,08,296 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதை விரைவில் 25 லட்சம் பரிசோதனைகள் என உயர்த்தப்படும்” , அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.