தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் கடைசியாக கோமாளி படம் 2019-ல் திரைக்கு வந்தது.

அதன்பின் அவர் நடித்த படங்கள் ரிலீசாகாமல் முடங்கிப் போய் உள்ளது .

சமீபத்தில் ஒரு ஆன்லைன் போர்ட்டலுடனான பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் .

அந்த உரையாடலில் பேசிய காஜல், தனது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து தனக்கு நல்ல ஆதரவு கிடைத்து வருவதாக பகிர்ந்து கொண்டார், இதனால் சினிமாவில் தன்னால் எளிதாக கவனம் செலுத்த முடிகிறது என்ற அவர், எவ்வளவு காலம் படங்களில் நடிப்பேன் என தனக்கு தெரியாது என்றார். ஆனால் தனது கணவர் கெளதம் சினிமாவை விட்டு விலகுமாறு கேட்டுக் கொள்ளும் போது, தான் திரைத்துறையில் இருந்து விலகிவிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார் .

 

[youtube-feed feed=1]