டெல்லி: நாடு முழுவதும் இதுவரை கொரோனா முதல் அலை மற்றும் 2வது அலையில் சிக்கி 1118 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர். இதை இந்திய மருத்துவ கழக தலைவர் டாக்டர் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த அலையில் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் முன்கள பணியாளர்களான மருத்துவர்க்ள் செவிலியர்களும் உயிரிழந்து வருகிறார்கள். மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட தகவலின்படி, தற்போது பரவி வரும் கொரோனா இரண்டாவது அலைக்கு முன்னாள் இந்திய மருத்துவ கழக தலைவர் டாக்டர் கே.கே.அகர்வால் உள்பட இதுவரை 260 மருத்துவர்கள் பலியாகி இருப்பதாகவும், தமிழகத்தில் மட்டும் 11 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளனர் என்றும் பட்டியல் வெளியிட்டது. இதில் பீகாரில் அதிகபட்சமாக 78 டாக்டர்களும், உத்தரபிரதேசத்தில் 37 பேரும், டெல்லியில் 29 பேரும், ஆந்திராவில் 22 பேரும் பலியாகி உள்ளார்கள்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய மருத்துவ கழக தலைவர் டாக்டர் ஜெயலால், நாடு முழுவதும் கொரோனாவால்வ பாதிக்கப்பட்டு இதுவரை இதுவரை 1118 டாக்டர்கள் உயிரிழந்து உள்ளதாகவும், முதல் அலையின்போது, நாடு முழுவதும் 748 டாக்டர்கள் உயிரிழந்தார்கள் என்று தெரிவித்து உள்ளார். தற்போது கொரோனாவின் 2வது அலை தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதால், முன்கள பணியாளர்களின் பலி மேலும் அதிகரிக்கும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார்.